தாய்-மகன் இருவரையும் கொடூரமாக எரித்துக் கொன்ற கொலைகாரன் கைது!


தாயும் மகனும் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் இடம்பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

சரவணன் மாற்றுதிறனாளி என்பதால் தனது பெற்றோர்களுக்கு வரும் பென்சன் பணத்தைக் கொண்டே அவர்களது வாழ்வாதாரம் சென்றுகொண்டிருந்தது.

இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை சரவணன் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீயில் சிக்கி கனகாவும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியானார்கள். சரவணன் அவரது பெண் குழந்தையுடன் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சரவணணை விசாரித்த போது திடுக்கிடம் தகவல் வெளியாகியுள்ளது.

சரவணன் தனது மனனவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு இறந்த போன 6 மாத ஆண் குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என கூறி சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டையில் மிகவும் கோபமடைந்த சரவணன் தனது மனைவி கனகாவையும் ,6 மாத குழந்தையும் தீ வைத்து கொழுத்தியமை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து பொலிசார் சரவணணை கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post