தெய்வமகள் சத்யாவையும் விட்டுவைக்காத பாலியல் தொல்லை

தெய்வமகளில் சத்யாவாக வரும் வாணி போஜனும் தானு பாலியல் தொல்லையில் சிக்கியதாக தற்போது கூறியுள்ளார்.

வெள்ளித்திரையைப் போன்று சின்னத்திரையில் வரும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அது ஒவ்வொரு சீரியலைப் பொறுத்தும் மாறுபடும். அந்த வகையில், வாணி ராணி, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, தெய்வமகள் என்று பல சீரியல்களுக்கு ரசிகர், ரசிகைகள் பட்டாளம் ஏராளம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நிலையில், தெய்வமகள் சீரியலில் வரும் சத்யா (வாணி போஜன்), அண்ணியாராக வரும் ரேகாகுமார் ஆகியோருக்கு என்று தனியாக ரசிகர்களும் உண்டு. இதில், வாணி போஜன் என்று கூறினால், பலருக்கும் தெரியாது. ஆனால், தெய்வமகள் சத்யா என்றால் அறியாதவர் யாரும் இல்லை. அந்தளவிற்கு இந்த சீரியல் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. திரைக்கு வரும் பல ஹீரோயின்கள் யாரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகாதவர் என்று சொல்லிவிட முடியாது. அந்தளவிற்கு பல பிரச்சனைகளைத் தாண்டி தான் ஹீரோயின்கள் நடிக்க வருகின்றனர். சமீபத்தில் உடைத்து பேசுவேன் என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில், சத்யாவும் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது பேசிய அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை பற்றி பேசிய அவர், தனக்கு சின்ன வயதில் நடந்த பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசினார். தான் 4ம் வகுப்பு படிக்கும் பொழுது தோழி வீட்டிற்கு சென்றாராம். அங்கு தோழியின் தந்தை, உன்னுடைய தோழி மேலே மாடியில் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். நானும், அதனை நம்பி மாடிக்குப் போக, பின்னாடியே வந்த அவர் கதவை பூட்டியுள்ளாராம். பின்பு, அவருக்கு தொல்லை கொடுத்துள்ளாராம். இதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் தோழியிடம் இதனை தெரிவிக்கவில்லை. ஒருவேளை நான் சொல்லியிருந்தால், அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post