டெங்கு காய்ச்­சலை கட்­டுப்­ப­டுத்த பச்சை நிற பழச்­சாறு

டெங்குக் காய்ச்சல் தொற்­றி­யுள்­ள­வர்­களின் எண்­ணிக்­கை­மேலும் மேலும் அதி­க­ரித்துச் செல்லும் நிலையில் இந்த நோய்க்கு சிறந்த நோய் நிவா­ரணி எனக் கரு­தப்­படும் பச்சை நிறத்­தி­லான பழ வகை­களின் சாறு­களைப் பரு­கு­மாறு வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.

பச்சை நிற அப்பில் மற்றும் திராட்சை (முந்­தி­ரிகை)ப் பழங்­களின் சாறு­க­ளில், டெங்கு நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை அதிகம் இருப்­பதால் இதனை டெங்கு நோயா­ளர்கள் எவ்­வித அச்­ச­மு­மின்றி பாவிக்க முடியும் என்றும் வைத்­தி­யர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 


உண­வ­கங்­களில் அல்­லது சுப்பர் மார்க்­கட்­டுக்­களில் போத்­தல்­களில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் பழச்­சா­று­க­ளை­விட இயற்­கை­யி­லேயே தயா­ரிக்­கப்­படும் பழச்­சா­று­க­ளி­லேயே அதி­கப்­ப­டி­யான விட்­ட­மின்­களும் நோய் எதிர்ப்பு சக்­தியும் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­பதால் இயற்கைச் சாறு­க­ளையே விசே­ட­மாகத் தயா­ரித்துப் பரு­கு­மாறும் வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.

பச்சை நிற அப்பில், பச்சை நிறத் திராட்சை ஆகிய பழங்­க­ளுக்கு மேல­தி­க­மாக, பச்சை நிற வேறு வகை­யி­லான பழச்­சா­று­க­ளையும் டெங்குக் காய்ச்சல் தொற்­றி­யுள்­ள­வர்கள் தயாரித்துப் பரு கலாம் என்றும் இதனால் எவ்விதப் பாதிப்புக்களும் உண்டாகமாட்டாது என்றும் வைத்தியர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.
Previous Post Next Post