தொலைபேசியை சார்ஜ் செய்துகொண்டே உரையாடிய யுவதி தொலைபேசி வெடித்ததால் பலி

இந்­தி­யாவின் ஒடிசா மாநி­லத்தில் செல்­லிடத் தொலை­பே­சி­யொன்றை சார்ஜ் செய்து கொண்­டி­ருக்­கும்­போதே அதன் மூலம் உரை­யாடிக் கொண்­டிருந்த 18 வய­தான யுவதி ஒருவர் அத்­தொ­லை­பேசி வெடித்­ததால் உயிரிழந்­துள்ளார்.

ஜஹர்­சு­குடா மாவட்­டத்தின் கீரி­யா­கனி கிரா­மத்தை சேர்ந்த உமா ஒரம் எனும் யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். 3 தினங்­க­ளுக்கு முன் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது.


இது தொடர்­பாக உமா ஒரமின் சகோ­தரர் கூறு­கையில், உமா ஒரம், உற­வினர் ஒரு­வ­ருடன் செல்­போனில் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். அப்­போது அதிக சத்­தத்­துடன் அந்த ஃபோன் வெடித்துச் சித­றி­யது. இதனால், உமா ஒரம் சுய­நி­னை­விழந்து வீழ்ந்தார். அவரின் நெஞ்சு, கை மற்றும் கால் பகு­தி­களில் பலத்த காயம் ஏற்­பட்­டி­ருந்­தது. உமா ஒரம், அருகில் உள்ள மருத்­து­வ­ம­னைக்கு சுய­நி­னை­வின்றி கொண்டு செல்­லப்­பட்­ட­போ­திலும், உமா உயி­ரி­ழந்து­ விட்­ட­தாக மருத்­துவர் கூறினார்” எனத் தெரி­வித்­துள்ளார்.

நோக்­கியா 5233 (Nokia 5233) ரக தொலை­பே­சி­யொன்றே இவ்­வாறு வெடித் ­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தயா­ரிக்­கப்­பட்ட தொலை­பே­சி­யாகும்.


2016 ஆம் ஆண்­டின்பின் மீண்டும் சந்­தைக்கு வந்த நோக்­கியா தொலை­பே­சி­க­ளுக்கு எச்.எம்.டி. குளோபல் (HMD Global) நிறு­வ­னமே பொறுப்­பாக உள்­ளது.

இந்­நி­லையில் ஒரு தசாப்த காலத்­துக்கு முன்னர் தயா­ரிக்­கப்­பட்ட மேற்­படி நோக்­கியா 5233 ரக தொலை­பே­சி­யா­னது எச்.எம்.டி. குளோபல் நிறு­வ­னத்தால் தயா­ரிக்­கப்­ப­டவோ விற்­கப்­ப­டவோ இல்லை எனவும் அந்­நி­றுவனம் தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி யுவ­தியின் மர­ணத்­துக்கு கவலை தெரி­வித்­துள்ள அந்­நி­று­வனம், 2016 ஆம் ஆண்டு முதல் எச்.எம்.டி. குளோபல் நிறு­வ­னத்தால் தயா­ரிக் ­கப்­படும் தொலை­பே­சிகள் உயர் தரமானவையாகவும் வாடிக்கையா ளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் தாம் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித் துள்ளது.
Previous Post Next Post