ஜிம்மே கதி என்று இருந்து வரும் சினேகா (வீடியோ)

உடல் எடை கூடியதால், தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் நடிகை சினேகா. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார் சினேகா. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.


இதையடுத்து, சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது இவர்களுக்கு பிரசன்னா விகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்ததாகக் கூறப்பட்டது. அதிக உடல் எடை இருந்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று கருதி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இதனால், ஜிம்மே கதி என்று இருந்து வருகிறாராம். இவருக்கு பக்கபலமாக இவரது கணவர் பிரசன்னா இருக்கிறாராம். தான் வொர்க்-அவுட் செய்யும் ஜிம் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சினேகா.


Previous Post Next Post