வரதட்சணை கொடுமையால் தீக்குளிப்பு

திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆன இளம் பெண் ஒருவர், காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துத்துக்குடி மாவட்டம் பெருமாள்குளத்தை சேர்ந்த சிவபெருமாளின் மகள் பத்மா வயது 21. பத்மா அதே ஊரைச்சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

ஆசை வார்த்தைகளை கூறி திருமணம் செய்த கணவனுக்கும், அவர் வீட்டாருக்கும் திருமணத்திற்கு பிறகு ஆபரணத்தின் மீது ஆசை ஏற்பட்டதால் பத்மா வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் கணவன், திடீரென வேறு ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசியதை பத்மா கண்டிததற்கு மோகன்ராஜின் அம்மா பத்மாவை தரக்குறைவாக திட்டினார். கணவரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அந்த பெண்ணிடம் பேசுவதை கணவர் மோகன்ராஜ் தொடரவே, பத்மா மனமுடைந்தார். தனது மகனுக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தால் ரூ.1 லட்சம் பணம் ரொக்கமாகவும், 20 சவரன் நகையும வரதட்சணையாக கிடைத்திருக்கும் என்று திட்டிய மோகன்ராஜ் அவருடைய தாயாருடன் இணைந்து காதல் மனைவி என்றும் பார்க்காமல் அடித்து விரட்டியுள்ளனர்.தனக்காக நியாயம் கேட்க வந்த தந்தையையும், சகோதரரையும் அடித்ததோடு, போலீசார் பிடித்து சென்றனர். தனது மரணத்திற்கு தனது கணவர் மோகன்ராஜூம், அவரது தாயாரும்தான் காரணம் என்றும் அவர்களை கைது செய்யுங்கள் என்றும்

தவறு செய்யாத என்னுடைய சகோதரரையும், தந்தையையும் விட்டுவிடுங்கள் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் பத்மா.

சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post