பள்ளி மாணவனுடன் பயனித்த 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பள்ளி மாணவர் ஒருவர் ஓட்டிச் சென்ற ஆட்டோ விபத்திற்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



மெனிக்கின்ன – பிஹிட்டிய பகுதி அருகே நேற்று மாலை பள்ளி மாணவர் ஒருவருடன் 18 வயதான இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

அந்த வாகனமானது, மெனிக்கின்ன – பிஹிட்டிய குறுக்கு வீதியில் சுந்தரபள்ளம பிரதேசத்தில் வேன் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அட்டோவினை ஓட்டிய பள்ளி மாணவர்

தற்போது கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post