40 நடிகைகள் மறுத்த கதை: பச்சைக்கொடி காட்டிய சதா!!

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத் தற்போது பெண்கள் சார்ந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கதையை சுமார் 40 நடிகைகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் மறுத்த பின்னர் நடிகர் சதா இதற்கு சம்மதித்தார் என்று அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்தப்படம் சதாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கதையே கேட்ட ஏனைய நடிகைகள் மறுத்தமைக்கு காரணம் உண்டு.

என்னவெனில் கதையை கேட்ட மற்ற நடிகைகள் பாலியல் தொழிலாளியாக நடிக்க மறுத்துள்ளனர். ஆனால் சதா இதற்கு ஒப்புக்கொண்டதை பலரும் பாராட்டியுள்ளனர்.

இதை பற்றி பேசிய இயக்குனர்,
‘பெண்களின் கண்ணீர் கதையாக போய் சேர வேண்டும். அப்பொழுதான் விழிப்புணர்வு பிறக்கும். மேலும் இப்படம் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post