71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல்

இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் பேர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் முத்த மழை பொழிந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலை 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இதனால் அவர்கள் அத்தனை பேருககும் முத்த மழையை பொழிந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 லட்சம் மட்டுமே.


இந்நிலையில் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தந்தை என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், ‘‘நான் என்.டி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனக்கு அந்தப் படத்தில் நடிக்க அழைப்பு எதுவும் வரவில்லை. மேலும் நான் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்க உள்ளதாக வரும் தகவல் உண்மை கிடையாது’’ என்றார்.
Previous Post Next Post