ஒருதலை காதல் விபரீதம்: மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைழக விடுதி வாசலிலேயே இளைஞர் ஒருவர், மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் லாவண்யா என்ற மாணவி தங்கி படித்து வந்துள்ளார்.

இன்று லாவண்யா விடுதியிலிருந்து வந்த போது, இளைஞர் ஒருவர் திடீரென கழுத்தை அறுக்க முயன்றுள்ளார், இதனை லாவண்யா தடுக்க முயலவே கை, முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.விடுதி வாசலிலேயே நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

உடனடியாக லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் பொலிசார் கைது செய்தனர்.

இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டியைச் சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது.

லாவண்யாவும் அதே ஊரை சேர்ந்தவர் ஆவார், என்ஜினீயரிங் பட்டதாரியான நவீன் சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில் லாவண்யாவை 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்துள்ளார்.

இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், ஒருகட்டத்தில் லாவண்யா பேசுவதை தவிர்த்துள்ளார், இவரது காதலையும் லாவண்யா ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த நவீன், இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post