ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் மெசன்ஜரில் பிரீபெயிட் ரீசார்ஜ் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஃபேஸ்புக் செயலியில் இருந்தபடியே மொபைல் நம்பர்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது.


முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும் வசதி ஆன்ட்ராய்ட் ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த சிலகாலம் காத்திருக்க வேண்டும். புதிய அம்சம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் மொபைல் டாப் அப் ஆப்ஷன் காணப்படுகிறது.


ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?
– ஃபேஸ்புக்கில் மொபைல் டாப் அப் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.– இனி மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றைத் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

– ரீசார்ஜ் தொகையை கட்டணம் செலுத்துவதற்கான பக்கத்தில் சென்று பண பரிமாற்ற முறையை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். இங்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்சமயம் வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும் நிலையில், யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவில்லை.
Previous Post Next Post