விட்டுவிடுங்கள்....கதறிய சிறுமிக்கு ரோட்டில் வைத்து நேர்ந்த கொடூரம்: நெஞ்சை உடைய செய்யும் வீடியோ

இந்தியாவில் 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்த பின்னரும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் ஜகானாபாத்தில் இச்சம்பவம் நேற்று நடந்து உள்ளது.

சிறுமியிடம் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவறான முறையில் நடந்துக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அதனை படம் பிடிக்கிறார்கள். சிறுமி அண்ணா, அண்ணா விட்டுவிடுங்கள் என கதறி அழும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

ஆனால், அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் மிகவும் அரக்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.

சிரித்துக்கொண்டு கொடூரமான முறையில் நடப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை உடைய செய்யும் வகையில் உள்ளது.


வீடியோவில் பைக் ஒன்று கீழே விழுந்து கிடக்கும் காட்சியும் உள்ளது.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சட்டம் கொண்டு வந்த பின்னரும் இப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post