பிரியங்கா பற்றி வைரலாக பரவிய ஒரு செய்தி- உண்மையை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தொகுப்பாளினி

படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சின்னத்திரையில் கலக்கும் பெண்களுக்கு அதிக ரசிகர்கள் வட்டாராம் என்று கூறலாம்.

அதிலும் தொகுப்பாளினிகளை பற்றி சொல்லவே வேண்டாம், டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா போன்ற பெண் தொகுப்பாளர்களின் ரசிகர்கள் வட்டாரம் எவ்வளவு பெரியது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வைரலாக பரவியது.இதுகுறித்து பிரியங்கா, ஒரு முறை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு உடனே ஷுட்டிங் செய்தோம். அப்போது பாம்பு நடனம் ஆடச் சொன்னார்கள், நிறைய சாப்பிட்டதால் அப்போது என்னால் சரியாக ஆட முடியவில்லை. அதை என்னுடன் இருந்த தொகுப்பாளர் மா.கா.பா என்ன இது கர்ப்பமான பாம்பு ஆடுகிற மாதிரி இருக்கு என்று கலாய்த்தார்.

அவர் சொன்னதை தப்பா எடுத்துக் கொண்டு வீடியோ எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் என் குடும்பத்தையும் பாதித்திருக்கிறது என்று நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது, எப்படி எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை என்றார்.
Previous Post Next Post