பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்: இப்படி ஒரு தண்டனை வழங்கிய மனைவி

கேரளாவில் கணவன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவி சுபைதா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது கணவர் பஷீர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இதற்கு காரணம் அவரது முக அழகுதான். அவரது முக அழகை சிதைத்துவிட்டால் வேறு பெண்கள் அவரை திரும்பிபார்க்கமாட்டார்கள். இதனால், ஆசிட் வீசி அவரது அழகை சிதைக்க திட்டம் தீட்டினேன்.



அதன்படி, ஆசிட் வாங்கி தூங்கிகொண்டிருந்த கணவரது முகத்தில் ஊற்றினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். கணவரின் தவறான நடத்தைக்கு பாடம் புகட்டவே அவ்வாறு செய்ததாக கூறிய சுபைதா, கணவரை கொலை செய்ய வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கணவருக்கு பாடம் புகட்ட முயன்று அது கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post