ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபாஸ் பட இயக்குனர்

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் பிரபாஸ் பட இயக்குனர் சிக்கியுள்ளார்.

தெலுங்கு திரைபட உலகில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தவிர, அடுத்ததடுத்து புகைப்பட ஆதாரங்களையும் அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் கொரடலா சிவா மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்த, கொரடலா சிவா கடலை போட்டதுடன் நேரில் வரும்படி கூறியதாக ஸ்ரீ ரெட்டி அவர் மீது புகார் தெரிவித்துள்ளார் .

ஏற்கனவே அவர் வெளியிட்ட பட்டியலில் பெரும் புள்ளி ராணாவின் தம்பி. ஆனால் ராணா குடும்பத்தார் அமைதியாக உள்ளதால், இது உண்மையாக இருக்கலாம் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Previous Post Next Post