டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லொரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்யும் சதா!


விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், தற்போது பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமான, ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிக்க தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சதா ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லொரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது.

முன்னணி நடிகைகள் பலரும் இப்படத்தை புறக்கணித்துள்ள நிலையில், சதா இப்படத்தில் நடிக்க தைரியமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படத்தை கொன்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம், ஆர்.கே ட்ரீம் வேர்ல்ட், வயிட் ஸ்க்ரீன் என்டர்டெய்ன்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.
Previous Post Next Post