தமிழ்நாட்டில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், தீக்குளித்த ராணுவ வீரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகேஷ், ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார்.
இவரும் திருத்தணியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் மகளும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பெண் கேட்டு ராகேஷ் தனது பெற்றோருடன் பெண்வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் தந்தை திருமணம் செய்து தர மறுத்ததால், ராகேஷ் அவரது வீட்டு முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராகேஷ் அரக்கோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.