உறவினருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி: காட்டி கொடுத்த சிசிடிவி வீடியோ

இந்தியாவில் கணவரின் சொத்துக்காக அவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் ஷைலீஸ் நிம்சே. இவர் மனைவி சாக்‌ஷி. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நிம்சேவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக அவருக்கும், சாக்‌ஷிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நிம்சே தன்னை விவாகரத்து செய்துவிட்டால் அவரின் சொத்துக்கள் தனக்கு கிடைக்காது என நினைத்து சாக்‌ஷி பயந்துள்ளார்.

இதனால் கணவரை தனது உறவினரான லூட் என்பவரின் உதவியுடன் கொல்ல முடிவெடுத்த சாக்‌ஷி இதற்காக அவருக்கு 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் கடந்த வாரம் தனது இரண்டு நண்பர்களுடன் லூட், நிம்சே வீட்டுக்கு வந்துள்ளார்.அங்கு சாக்‌ஷியும் இருந்த நிலையில், தூங்கி கொண்டிருந்த நிம்சேவின் கழுத்தை நெரித்து எல்லோரும் கொலை செய்துள்ளனர்.

பிறகு அவரின் சடலத்தை பாதி எரித்துவிட்டு காட்டு பகுதியில் தூக்கி போட்டுள்ளனர்.

அடுத்த நாள நிம்சேவை காணவில்லை என அவர் உறவினர்கள் பொலிசில் புகார் அளித்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

நிம்சே வீட்டு பகுதியில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை பொலிசார் ஆராய்ந்த போது லூட் தனது நண்பர்களுடன் அங்கு வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரை பிடித்து பொலிசார் விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் ஒப்பு கொண்டார்.

இதை தொடர்ந்து சாக்‌ஷி மற்றும் லூட்டை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.
Previous Post Next Post