ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா ….? அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள்.


135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது.

போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது.

முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கும். பின்னர் போதை பொருட்களால் உடல் நலம் கெடுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டது.ஆய்வில் பங்கேற்ற 135 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மாணவர்களிடம் தனிமை கவலை மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக தனிமை உணர்வு சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு மாற்றாக இருக்கிறது.இதே மாணவர்கள் படிப்பது, வீடியோ பார்ப்பது, உணவு உட்கொள்வது மற்றும் வகுப்புகளை கவனிக்கும் போது என ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் அவர்களின் உடல் மற்றும் மனதிற்கு தேவையான ஓய்வை வழங்க சிறிது நேரம் மட்டுமே வழங்கும் என பெப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கை செமி-டாஸ்கிங்-க்கு வழி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். செமி-டாஸ்கிங் என்பது பல பணிகளை ஒரே நேரத்தில் குறைந்த கவனத்தில் செய்வது ஆகும். இதனால் எந்த பணியையும் முழுமையாகவோ அல்லது சரியாகவோ செய்ய முடியாது.

ஸ்மார்ட்போன்களில் புஷ் நோட்டிபிகேஷன்கள், வைப்ரேஷன்கள் மற்றும் இதர அலெர்ட்கள் தான் ஸ்மார்ட்போன் திரையை அடிக்கடி பார்க்க வழி செய்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை குறைக்க புஷ் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கலாம். இதன் மூலம் மிக முக்கிய சேவைகளில் மட்டும் நேரத்தை செலவழிக்க முடியும்.

Previous Post Next Post