இந்தியாவில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போதே ஏழு ஏழை பெண்களுக்கும் சேர்த்து திருமணம் செய்து வைத்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அஜிமா கிராமத்தை சேர்ந்தவர் அம்ருத் தேசாய். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
தனது மகள் திருமணத்தின் போது அம்ருத் செய்த செயல் அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
காரணம், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த படி கிராமத்தில் உள்ள ஏழு ஏழை பெண்களுக்கு தனது சொந்த செலவிலேயே தனது மகளின் திருமணத்தின் போதே அம்ருத் திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் செய்து வைத்ததோடு மணமக்களுக்கு வீட்டு உபயோகத்துக்கு தேவையான பொருட்களையும் அம்ருத் பரிசாக வழங்கினார்.
இந்த திருமணத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் கலந்து கொண்டார்கள்.
இது குறித்து அம்ருத் கூறுகையில், பழமைவாய்ந்த சாதி பிரிவினைகளை வேரறுக்கவே இதை செய்தோம்.
இந்த திருமணங்களை நடத்துவது குறித்து ஊர் மக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினேன்.
அவர்கள் அதை ஏற்றதோடு மட்டுமில்லாமல் திருமண விழாவில் தீவிரமாக பங்கேற்கவும் ஒப்புக்கொண்டனர் என கூறியுள்ளார்.