மகள் வீட்டில் தந்தையின் மோசமான செயல்

ஹக்மன பொல்கிரிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரான பெண்ணொருவரின் தந்தை சந்தேகத்தின் பேரில் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் ஹக்மன நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன் அவர் தனது கணவன், பிள்ளைகள், தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் வசித்து வருகிறார்.சந்தேக நபர் வீட்டில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளார். போயா தினம் என்பதால், வீட்டில் அனைவரும் இருப்பார்கள் காணாமல் போன தங்கத்தை தேடுவார்கள் என அறிந்துக்கொண்ட சந்தேக நபர், வீட்டு ஜன்னல் ஒன்றை உடைத்து, வீட்டில் அடுக்க வைக்கப்பட்டிருந்த துணிகளை கலைத்து போட்டு விட்டு, வீட்டுக்குள் திருடன் புகுந்துள்ளதாக தனது மகளுக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பெண்ணின் தந்தை வழங்கிய முன்னுக்கு பின் முரணான தகவல்களை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post