அவர் திருமணம் செய்துகொண்டது ஒரு தப்பா ?., திருமணமான 10 நாட்களிலே நடந்த கொடூரம்..!

திருமண சிலநாட்களிலே கணவனை முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர ராவ். இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அதே மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த கடேகல்ல கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னதாக சரஸ்வதிக்கு பேஸ்புக் மூலம் சிவா என்பவரும் நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அனால் , சரஸ்வதியின் படிப்பு செலவுக்கு அவரது மாமா குடும்பத்தார் உதவி செய்து வந்ததால், மாமாவுக்கே சரஸ்வதியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கௌரிசங்கர ராவிற்கு கட் டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தனது காதலன் சிவா மற்றும் ஒரு ரௌடியுடன் சேர்ந்து கொண்டு, கணவரை கொல்ல சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார். திருமணமான 10 நாட்களுக்கு பிறகு, விழியநகரத்திற்கு ஷாப்பிங் சென்றுள்ளனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த சிவா மற்றும் ரௌடி இருவரும் இரும்பு கம்பியால் கௌரிசங்கர ராவை தாக்கி தப்பியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

ஆனால் மர்ம நபர்கள் நகைகளை திருட வந்ததாகவும் தனது கணவர் தடுக்க முயன்றதால் அவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பி சென்று விட்டதாகவும் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் சரஸ்வதி போன் செய்து எதுவும் தெரியாதது போல் கதறி அழுதுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த போலீசார், சரஸ்வதியின் கால் ரெக்கார்டை ஆய்வு செய்தனர். அதில் சிவா உடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரஸ்வதி, சிவா, கோபி, அவரது ஆதரவாளர் உட்பட 5 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post