பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்.. கையை பிடித்து இழுத்துச் சென்று முன்னாள் உலக அழகி செய்த காரியம்..?


முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்றி கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது நடந்ததாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்.

நான் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது திடீரென யாரோ ஒரு நபர் என் பின்னால் நின்று தகாத முறையில் என்னை தீண்டுவதை நான் உணர்ந்தேன்.

அந்த கூட்டத்தில் தான் சிக்க மாட்டேன் என்று நினைத்து அந்த நபர் என்னை தீண்டியிருக்க வேண்டும். அந்த நபர் என்னை தீண்டிய மறு நொடி அவனது கையை பிடித்து இழுத்து திரும்பி பார்த்த போதுதான். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவன் ஒரு 15 வயதுமிக்க சிறுவன். அவன் கழுத்தில் கைப்போட்டு என்னுடன் நடக்க வைத்து அழைத்து சென்றேன்.

ஒருவேளை நான் இப்போது நினைத்தால்… நீ செய்த தவறை அனைவர் முன்னிலும் சுட்டிக் காட்டினால். உன் வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடும் என்று அறிவுரை கூறினேன்.

ஆரம்பத்தில் அவன் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நான் மேலும் கண்டிப்புடன் பேசிய போது… தான் செய்தது தவறு என்றும், மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன், என்று தன்னிடம் கூறியதாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post