பிக்பாஸ் 2-ல் விஜய், அஜித் பட ஹீரோயின்? - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றனர் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அது போலி என்பது பின்னர் தான் தெரியவந்தது.

தற்போது வந்துள்ள தகவல் படி,90களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சிம்ரன் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இதற்குமுன் நடிகை கஸ்தூரி பங்கேற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post