4 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

இந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி கைக்குழந்தையுடன் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த நவீன் என்பவர் குழந்தையை துக்கிச் சென்றதுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து குழந்தையின் வாயை பொத்தி துன்புறுத்தி, தரையில் வீசி அடித்துக் கொன்று தப்பியோடி விட்டார்.

மறுநாள் காலை குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், சிசிடிவி காட்சிகயை ஆய்வு செய்த போது நவீன் குழந்தை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதன்பின்னர் நவீனை கைது செய்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு இந்தூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போஸ்கோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வர்ஷா வர்மா தீர்ப்பளித்துள்ளார்.
Previous Post Next Post