5 பிள்ளைகளின் தந்தையை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ரஷ்யாவில் இளம் பெண் ஒருவர் தன்னைவிட 26 வயது அதிகமுடைய மில்லியனரை திருமணம் செய்துள்ளார்.

ரஷ்யாவின் பிரபல தொழிலதிபராக இருப்பவர் Konstantin Scherbinin. 55 வயதான இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அப்பாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் Millionaire for Marriage என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், 29 வயது மதிக்கத்தக்க Yulia Sveshnikova-வே இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் வென்ற இவருக்கு 36,500 பவுண்ட் மதிப்புள்ள டைமண்ட் மோதிரம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் Konstantin Scherbinin மோதிரத்தை மாற்றியுள்ளார்.

பல பில்லியன் கணக்குக்கு சொந்தக்காரரான Konstantin Scherbinin -க்கு ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் சொகுசு வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி அதிகவிலையுயர்ந்த கார்கள், ஒரு தனியார் விமானமும் உள்ளது.



இது குறித்து Yulia Sveshnikova கூறுகையில், நான் சிபிரியாவிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவிற்கு வந்தேன்.

கையில் ஒரு பணமும் கூட இல்லாமல் படிக்க வந்தேன். படிப்போடு சேர்த்து தற்போது பார்க் டைம் வேலையும் செய்து வருகிறேன்.



நான் தைரியமான பெண், என்னுடன் இறுதிப் போட்டியில் Maria Praim(30) மற்றும் Anna Kim(34) இருந்தனர். அவர்களை வீழ்த்தி தற்போது வெற்றி பெற்றுள்ளேன்.

போட்டியின் போது அவரின் 5 பிள்ளைகளும் போட்டியாளர்களை அவர்கள் முன்பு வந்து நிற்கச் சொல்வார்களாம், அதன் பின் அவர்களுக்கு பிடித்திருந்தால் சரி, இல்லையென்றால் எலிமினேட் செய்துவிடுவார்கள் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் இது குறித்து தெரிவித்துள்ளன.



மேலும் Konstantin Scherbinin கூறுகையில், இதை என் பிள்ளைகள் தெரிவு செய்துள்ளனர். இருப்பினும் Yulia Sveshnikova-விற்கும், அவர்களுக்கும் சண்டை வராமல் இருக்காது என்று கூற முடியாது என்று கூறியுள்ளார்.

Konstantin Scherbinin-வுக்கு இது ஆறாவது திருமணம். இவர்கள் தேனிலவிற்கு துபாய் செல்லவிருப்பதாகவும் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post