சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா?”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா?? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! (படங்கள் & வீடியோ)
கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2018) பேர்ண் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது, தவில் வாசித்துக் கொண்டு இருந்த தவில்நாத இசைக் கலைஞர்களை, அவர்களின் சலனம் முடியாமலே இடைமறித்து, பேர்ண் முருகன் ஆலயத்தின் “வாழ்த்துப்பா”வை வாசிக்கும்படி “ஐயர்” அவர்கள் கூறி உள்ளார்..
அப்போது தவில் இசைக் கலைஞர் “இது பிழை, சலனம் முடிய முதல், இப்படி நீங்கள் நடப்பது, எமது கலையை அவமதிப்பது போன்றது, நாம் ஊரில் இருந்து பிச்சை எடுத்து சாப்பிட வரவில்லை” என்றதும்..,
இதனால், கோபப்பட்ட பேர்ண் முருகன் ஆலய ஐயரோ, “சண்டியர்” போன்று அடிக்கப் பாய்ந்தாராம்.. அவருடன் இணைந்து அவரது “எடுபிடிகளும்” பாய்ந்த போதும், கலியாண வீட்டுக்கு சமூகம் தந்தவர்களே, “இவர்களை பிடித்து, சமாதானப் படுத்தினார்களாம்”..

இதுகுறித்து “அதிரடி” இணையம் சம்பந்தப்பட்ட, தவில் இசைக் கலைஞரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “இதுவோர் அவசரத்தில், தவறுதலாக நடந்த சாதாரண சம்பவம்.., இதனை நாம் கதைத்து தீர்த்து விட்டோம், இதனை ஏனையோரும் பெரிதுபடுத்த வேண்டாமென” தெரிவித்தார்.
ஆயினும், “நடந்த சம்பவங்களை விபரித்தால், யார் பக்கம் நியாயம்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களென” மீண்டும் கேட்ட போது, “நாம் எவ்வாறு, குருக்கள்மார்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோமோ, அதேபோல் அவர்களும் தவில்நாத இசைக் கலைஞர்களையும் மதிக்க வேண்டும். குருக்கள்மார் எல்லோரும் இப்படி நடப்பதில்லை, ஓரிரு குருக்கள்மார் இப்படி நடப்பதன் மூலம் எல்லோருமே பாதிக்கப்படுகின்றனர்”,
தவிர, “அன்றையதினம் தவில்நாத வாசிப்பின் போது, கீர்த்தனை, சலனம் போன்றவைகளின் போது, குருக்கள் எம்மிடம் எதுவும் சொல்லாமலே இடைமறித்து நடந்த சம்பவம் ஏற்புடையது அல்ல.. வாழ்த்துப்பா வாசிப்பதில் தவறில்லை, ஆனால் எங்களையும், எங்கள் கலையையும் அவமரியாதை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், உடனேயே நான் “இது பிழை” என்று சுட்டிக் காட்டினேன்..அதுக்கு அவர் அப்படி பாய்ந்து வருவாரென நினைக்கவில்லை.. பின்னர் அவர் அதுகுறித்து மன்னிப்பு கேட்டு விட்டார், ஆயினும் அந்த நேரம் பொறுமையாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டு இருக்காது”என்றார்.
இதேவேளை “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின்படி, “சுவிஸ் உட்பட புலம்பெயர் தேசங்களில் உள்ள சில கோயில்கள், இலங்கையில் உள்ள இசைக் கலைஞர்களை, “ஸ்பான்சர்” பண்ணினால் மட்டும் காணும் என அழைப்பதும், அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு வருவதும்; வந்த இடத்தில் தமது வருமானத்துக்காக, சில விடயங்களை அவர்கள் சமாளித்துப் போவதுமே, எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறதென தெரிய வருகிறது.
இதேவேளை இச்சம்பவம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் இருந்து வரும் மங்கள வாத்திய கலைஞர்களுக்கு ஓர் வேண்டுகோல்.., சுவிஸ்நாட்டில் இருந்து உங்கள் கலைத்தொழிலை செய்யும் கலைஞர்களை மரியாதை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு எந்த இடையயூரும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கலைத்தொழில் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, சாதாரணமாக இந்துக்கள் எல்லோருக்கும் குருவாகவும், மதிப்புக்கு உரியவர்களாகவும் விளங்குபவர்கள் “ஐயர், சர்மா, குருக்கள்” எனும் பிராமணர்களே… இப்போது பிராமணர்களே, “தெருச் சண்டியர்” போன்று நடந்து கொண்டால், நாம் என்ன செய்வது? என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத் தக்கது.
நீண்டகாலமாக சுவிஸில் வதியும் குருக்கள்கள் உட்பட, எல்லாக் குருக்களும் இப்படி இல்லை என்பதை நாமறிவோம்.., ஆயினும் ஓரிருவர் செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள், அந்த சமுதாயத்தையே பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென “அதிரடி” இணையம் கேட்டுக் கொள்கின்றது.
இதேவேளை மேற்படி சம்பவம் குறித்த வீடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் “வைரலாக” பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் “அதிரடி” இணையத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பலரிடம் இருந்து கிடைத்த “நம்பகத்தகுந்த” தகவலின் பிரகாரம், மேற்படி “ஐயர்” குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப் படுகின்றது.
“தன்னைத் தானே” திருத்திக் கொள்வார் எனும் நம்பிக்கையில், “அதிரடி” இணையம் அதுகுறித்து, எதுவும் “இப்போதைக்கு” பிரசுரிக்க விரும்பவில்லைஎன்பதையும் அறிய தருகின்றோம்.

Previous Post Next Post