கடற்கரையில் கடல் ஆமையை கடித்து திண்ணும் சிறுத்தை: கமெராவில் சிக்கிய காட்சி


கொஸ்டா ரிகாவில் உள்ள கடற்கரையில் கடல் ஆமையை சிறுத்தை ஒன்று கடித்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவின் கொஸ்டா ரிகாவில் உள்ள Tortuguero தேசியா பூங்காவில் இருக்கும் கடற்கரையில், கடல் ஆமை ஒன்றை, சிறுத்தை அதன் தலைப் பகுதியை கடித்து திண்றுள்ளது.இது தொடர்பான காட்சியை கொஸ்டா ரிகாவாவைச் சேர்ந்த நபர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதாகவும், அதில் ஒரு சிறுத்தை தான் ஆமையை அடித்து சாப்பிட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சிறுத்தை அடித்த பின்பு தான் ஆமை இறந்ததா அல்லது அதற்கு முன்பே இறந்ததா என்பது குறித்து தெரியவில்லை.

வடக்கு கரீபியன் பகுதிகளில் மே முதல் அக்டோபர் மாதம் வரை கடல் ஆமைகள் முட்டை போடுவதற்கு, கடலில் இருந்து வெளிவரும், அப்படி வெளிவரும் போது தான் சிறுத்தைகள் பொறுத்திருந்து வேட்டையாடி வருகின்றன.
Previous Post Next Post