அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது .,செத்துவிடுவேன் ,தகாத உறவு கொண்ட தனது மாணவனுக்காக கதறி அழுத ஆசிரியை..!தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரின் ராம்தர்பார் பகுதியைச் சேர்ந்தவர் உமா. இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவனும், அவனது தங்கையும் உமாவிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.

அப்போது அவர் மாணவனுக்கு தனியாக பாடம் சொல்லித் தர வேண்டும், இதன் காரணமாக தங்கையை அனுப்ப வேண்டாம். அவளுக்கு நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.இந்நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்ட உமா மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்.

இது கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னிடம் தொடர்பு கொள்ள மாணவனுக்கு தனி சிம்கார்டு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இப்படி இது நடந்து வந்த வேளையில், மாணவன் சரியாக பாடத்தில் மதிப்பெண் எடுக்காத காரணத்தினால் பெற்றோர் டியூசனுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

மாணவனும் தொடர்ந்து டியூசனுக்கு செல்லாததால், மாணவனின் வீட்டுக்கு சென்ற உமா அவனை டியூஷனுக்கு அனுப்புங்கள், இனி நன்றாகப் படிப்பான் என கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் அனுப்பவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு உமா கூறியுள்ளார்.

அதன் பின் மாணவனுடன் அவனது பெற்றோரும் உமாவின் வீட்டிற்கு சென்றனர்.உடனே உமா, மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர, அவர்கள் தலையிட்டு மாணவனை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் அவர்களை பின் தொடர்ந்த் உமா, அவனை என்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி டானிக் பாட்டில் ஒன்றை திறந்து வாயில் ஊற்ற, மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், போலிசார் உமாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Previous Post Next Post