
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்ட நடிகர்களில் டி.ராஜேந்தர் ஒருவர். இவரின் படங்களுக்கு ஒரு காலத்தில் பெண் ரசிகர் கூட்டம் அதிகம். தற்போது இவர் அரசியலிலும் முழு கவனம் செலுத்துகிறார்.
இவர் கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு 'வீராச்சாமி' என்ற படத்தை இயக்கினார். அதன் பின் படங்கள் இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்த படம் அரசியல் நையாண்டியுடன் கூடிய கதையாக இருக்கும் என்றும், இந்த படத்தை டி.ஆர் இயக்கி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் உள்ளார். இந்த படத்தில் ரோபோசங்கர், நடிகர் ராதாரவி நடிக்கின்றனர்.
மேலும், மிகவும் முக்கியமான கதாப்பதிரத்தில், சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட கவர்ச்சி நடிகை நமீதா நடிக்க உள்ளார். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.