
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழக வரலாற்றில், பெரும் கரும் புள்ளியாக மாறிய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகத்தை சேர்ந்த துணை நடிகர்கள் போராட்டமும் செய்தனர்.
துப்பாக்கி சூடு நடந்த போது பிரபல சின்ன திரை நடிகை நிலானி என்பவர் படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த காணொளியில், ''இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது எனவும், அப்பாவி போது மக்களை துப்பாக்கியால் சுட்டு சாகடித்துள்ளார்கள்.
போராட்டம் நடத்தினால் போலீசாருக்கு சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். அனால் இதை யாரும் பின்பற்றாமல் பொதுமக்களை கொலை செய்துள்ளார்''. என பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில், அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், ஆள்மாறாட்டம், தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளார்.