அரை நிர்வாண போராட்ட நாயகிக்கு மறுபடியும் என்ன பிரச்சினையோ ? மீண்டும் போராட்டக்களத்தில் குதித்ததால் பரபரப்பு..!தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று சர்ச்சையை கிளப்பியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

இவரது குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகத்தினர் ஒருவித கலக்கத்திலேயே இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை ஸ்ரீலீக்ஸ் என்ற தனது முகநூல் பக்கத்தில் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார்

அதனால் தெலுங்கு திரையுலகினர் அனைவரும் பதற்றத்தில் இருந்தனர்.

அதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. இதை எதிர்த்து ஸ்ரீ ரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்.மேலும் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம், மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.அவருக்கு ஆதரவாக பல நடிகைகளும் தானே முன்வந்து தங்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளை வெளியிட்டனர்

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் அமைப்புகள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் .இந்நிலையில் ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர்.

அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி தலையில் முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post