

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த ரகு என்கிற காளியப்பனுக்கு நடிகர் தனுஷ் தனது இரங்கலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.