வேண்டாம் என கெஞ்சினேன்: காதலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட காதலன்

மேற்கு வங்க மாநிலத்தில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்த மருத்துவ கல்லூரி மாணவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் பொலிசில் அளித்த புகாரில், கவுசர் அலி என்பவரும், நானும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். இருவரது திருமணத்திற்கு எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்து, அவரை அணுகியபோது அவர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலக ஆரம்பித்தார்.இதற்கிடையில் எனது நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார், இப்படி செய்யாதே என அவனை கெஞ்சி கேட்டும் அவன் கேட்கவில்லை. தொடர்ந்து எனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்தான்.'

அவனை காதலிக்கும்போது, உன்னை எப்போதும் கைவிடமாட்டேன் என வாக்குறுதி அளித்தான், அவனை உயிருக்கு உயிராக காதலித்ததால் இதுபோன்ற புகைப்படத்தை எடுக்க சம்மதித்தேன், ஆனால் தற்போது அதனை தவறாக பயன்படுத்துகிறான் என புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post