பிரபல நடிகை மணிஷா சாலை விபத்தில் மரணம்.!

போஜ்பூரி படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை மணிஷா ராய் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் பலியானார்.

போஜ்பூரி படங்களில் தனக்கென ஓரு தனி அடையாளம் பெற்ற நடிகை மனிஷா ராய், அவருக்கு வயது 45. அவர் நடித்துள்ள 'ககோபார்' என்ற போஜ்புரி படம் மிகவும் வட இந்தியாவில் மிக பிரபலமான ஒரு திரைப்படம். அந்த படத்தில் நடித்ததற்காக மணிஷா ராய்க்கு பல விருதுகள் கிடைத்தது.

தற்போது, திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வரும் அவர், திரைப்பட காட்சியில் நடிக்க சென்ற இடத்தில விபத்துக்குள்ளாகி இருந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.



உத்திரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள சித்துன்னியா எனும் கிராமத்தில் மனிஷா சினிமா படப்பிடிப்பிற்கு தனது உதவியாளர் சஞ்ஜீவ் மிஷ்ராவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது.

அப்போது, எதிரே வந்த கார் மோதியதால், நிலை தடுமாறி கீழே விழுந்த மனிஷா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அப்பகுதியில் இருந்து தப்பித்து விட்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை விரைவில் கண்டுபிடிப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post