சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன??

சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன??
இருதினங்களுக்கு முன்னர், சுவிஸ் பேர்ண் முருகன் கோவில் முன்றலில், கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய தொண்டர் ஒருவரை, ஆலய தலைவரின் பெறாமக்களால் வெளியே அழைத்து சென்று தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிய வருகிறது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, “ராஜு அல்லது சுபாஷ் என அழைக்கப்படும் தூண் நகர தமிழ் வர்த்தகரான தர்மலிங்கம் சுபாஸ்கரன் என்பவரே ஆலய தலைவரின் பெறாமக்களால் தாக்குதலுக்கு இலக்காகி தூண் நகர வைத்தியசாலையில் சிகிசசை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
மேற்படி தர்மலிங்கம் சுபாஸ்கரன் என்பவர் இக்கோவிலான “பேர்ண் முருகன் கோவில்” ஆரம்பித்த காலம் முதல், தொண்டர்களில் ஒருவராக செயலாற்றி வருவதுடன், மேற்படி பேர்ண் முருகன் கோவிலை புதுப்பிக்கவும், பெருமளவில் நிதி சேகரித்து வழங்கியவர்களில் ஒருவர் எனவும், இவர் தனது தனிப்பட்ட செலவில் சுமார் முப்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான “தங்கத்தேரை” கடந்த தைப்பூசத்தின் போது அன்பளிப்பு செய்தவர் எனவும், அத்துடன் இவரும் கடந்த காலங்களில் ஆலயத்தின் நிர்வாகசபையில் (முன்னாள் செயலாளர்) அங்கத்துவம் வகித்ததுடன், இவ்வருடமும் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும், பின்னர் விலக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
தாக்குதலுக்கான காரணம் எதுவென தெரிய வராத போதிலும், பேர்ண் முருகன் கோவில் “நிர்வாகப் போட்டியே” காரணமென பலரும் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை மேற்படி சம்பவம், கோவில் முன்றலில் நடைபெற்ற போது கோவிலில் தலைவர், உபதலைவர் போன்றோர் இருந்த போதும் “உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏனென?” சிலர் விசனம் தெரிவித்தும் உள்ளனர்.
இதேவேளை மேற்படி சம்பவம் குறித்து “அதிரடி” இணையம், பேர்ண் முருகன் கோவில் நிர்வாக சபைக்கு நெருக்கமானவர்களுடன், நேற்றையதினம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது கோவிலுக்கு வெளியே நடைபெற்ற சம்பவம், இதை பெரிதுபடுத்தவோ, செய்தியாக்கவோ வேண்டாம் எனவும், எதுக்காக இது நடைபெற்றது? என்பது தமக்கு தெரியாது” எனவும் குறிப்பிட்டனர்.
இது போன்று குறிப்பிட்டதன் காரணமாக, நாம் இச் செய்தியை உடனேயே “அதிரடி”யில் பதிவேற்றம் செய்யவில்லை. ஆயினும் இன்று எமக்கு கிடைத்த மேலதிக தகவலின்படி, “தாக்குதலானது கோவில் முன்றலில் நடைபெற்றதுடன், தாக்குதலுக்கு இலக்காகிய சுபாஸ்கரன் என்பவர், தாக்குதல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், அத்தோடு பொலிஸாரிடமும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும்” தெரிய வந்ததை அடுத்தே, பதிவேற்றம் செய்து உள்ளோம்.
இதேவேளை மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தாக்குதலுக்கு இலக்கான சுபாஸ்கரன் என்பவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது உண்மையான சம்பவம் தான் எனவும், தன்மீது, கொலை வெறியுடன் கொடூரத் தாக்குதல் நடத்தியோரான உதயதாஸ் கௌசிகன், உதயதாஸ் வாகீசன் ஆகியோர் மீது, தான் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியத்துக்கான காரணம் இதுவரை புரியவில்லை” எனவும்..,
“கோவில் வழிபாடு முடிந்த பின்னர் ஐயருடன் உரையாடிக் கொண்டு இருந்த தன்னை “வெளியே வருமாறு” அழைத்து, கோவில் வாசலியிலேயே தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனை அவ்விடத்தில் இருந்த “கோவில் நிர்வாகசபை” தலைவரும், உபதலைவரும் “உடனடியாக” சட்ட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன்” எனவும் தெரிவித்தார்.
கடந்த இருவாரத்துக்கு முன்னர் இதே பேர்ண் முருகன் கோவிலில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினால் ஏற்பட்ட “களங்கம் மறையும் முன்னரே” மீண்டும் இதுபோன்று சுவிஸ் பேர்ண் முருகன் கோவிலில் நடைபெற்று உள்ளது பலரது கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை “பேர்ண் முருகன் கோவில் நிர்வாகம்” உடன் கவனத்தில் எடுத்து, “உரிய நடவடிக்கை” மேற்கொள்ள வேண்டுமென பலரும் கேட்டுக் கொள்கின்றனர்.


நன்றி : அதிரடி இணையம் .


சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா?? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! (படங்கள் & வீடியோ)


Previous Post Next Post