
தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாகி மக்கள் வரவேற்பை பெற்றது பிக்பாஸ் .
இந்த நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர் ஜுலி.தனது செயலால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து மக்களின் மோசமான விமர்சனங்கள் மூலம் மக்களிடம் அதிகம் போய் சேர்ந்தவர ஜூலி.

இவர் பிக்பாஸ்க்கு பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
பின்னர் சமீபகாலமாக அவ்வப்போது சமூக பிரச்சினைகளை குறித்தும், நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் ஜுலி.

இந்த நேரத்தில் டுவிட்டரில் ஜுலி மக்கள் இயக்கம் என்ற பெயரில் பக்கம் தொடங்கப்பட்டு கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பக்கத்தில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, நீங்களும் ஜுலியுடன் அரசியலில் இறங்கினால் உங்களை நாங்கள் முதலமைச்சர் ஆக்குவோம் என்று பதிவு செய்துள்ளனர்.
அதற்கு கஸ்தூரி, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளா