தமிழகத்தின் விருத்தாசலம் பகுதியில் 20 வயது இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசானா(20).
இவர் சில மாதங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த விஜய் என அழைக்கப்படும் பிரபாகரன் (25) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம்பெண் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டு, கள்ளக்குறிச்சிக்கு வேலை செல்வதைத் தவிர்த்து, விருத்தாசலத்திலே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில் பிரபாகரன், ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சியிலிருந்து இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் வந்துள்ளார்.
பின்னர் அசானா வேலைக்குச் செல்வதைக் கண்காணித்து, சரோஜினி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து, கத்தியால் கழுத்துப் பகுதியில் அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இச்சம்பவத்தால் நிலைகுலைந்த அசானா கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர். இதையடுத்து பிரபாகரன் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இருந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த விருத்தாசலம் பொலிஸார் அசானாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.