
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இப்பபடத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசுல பாடலின் வரிகள், அனிருத் இசையில் இசையமைத்த டிரெய்லர் வைரலாக பரவி வருகிறது.
அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், லைகா புரோடக்சன் தயாரிப்பில் வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா.தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருவதால் நயன்தாராவின் இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
காமெடி நடிகர் யோகிபாபு ''யாமிருக்க பயமேன்'' என்ற படத்தில் பண்ணி மூஞ்சு வாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு, யோகி பாபு லவ் புரொபோஸ் செய்வது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளவர் நயன்தாரா. இவர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற வளரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளார்.
ஆனால், கதைக்கு தேவைப்பட்டதால் தன் இமேஜை பற்றி கலைப்படாமல் காமெடி நடிகர் யோகிபாபு காதலிக்கும் பெண்ணாக நயன்தாரா நடிப்பது, அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.