கவர்ச்சிப் படத்தை வெளியிட்ட ‘இருட்டறையில் முரட்டு குத்து’ நாயகி

வெளியாகியுள்ள ‘இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தின் வெற்றியின் சந்தோஷத்தில் படத்தின் நாயகி சந்திரிகா ரவி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இதற்கு முன் கௌதம் கார்த்தியை வைத்து ‘ஹர ஹர மஹா தேவகி’ என்ற அடல்ட் படத்தை இயக்கினார். அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தற்போது அதே மாதிரி ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தற்போது வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்தப் படத்தில் கௌதம் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்தள்ளார்.இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை சந்திரிகா ரவி அவரின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு அதிகமான லைக்ஸ் கிடைத்து வருகிறது.
Previous Post Next Post