வீட்டை விற்பதற்கு புகைப்படம் எடுத்த உரிமையாளர் நிர்வாணமாக சிக்கிக் கொண்ட பரிதாபம்….!!

தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டின் உரிமையாளர் நிர்வாண நிலையில் இருந்த படி புகைப்படங்கள் எடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டில் இருக்கும் படுக்கையறை, ஹால் போன்றவைகளை புகைப்படங்களாக எடுத்து, அந்த புகைப்படங்களை வீட்டை விற்றுத் தரும் புரோக்கர் ஒருவரிடம் கொடுத்து வீட்டை விற்றுத் தரும் படி கூறியுள்ளார்.

அதன் படி அந்த புரோக்கரும் அந்த புகைப்படங்களை சரிவர பார்க்காமல் உடனடியாக பிரபல இணையதளம் ஒன்றில் அந்த புகைப்படங்களை எல்லாம் பதிவேற்றம் செய்து வீடு விற்பனைக்கு என்று விளம்பரம் செய்துள்ளார்.அப்போது அந்த புரோக்கரின் நண்பர் ஒருவர் இணையத்தில் அந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், அதில் இருந்த புகைப்படங்களில் ஒன்றில், யாரோ ஒருவர் நிர்வாணமாக இருப்பது போன்று இருந்துள்ளது.



அந்த புகைப்படத்தில் அது சிறிய அளவில் இருந்ததால், அதை யாரும் சரிவர கவனிக்கவில்லை என்பதால் பல மாதங்களாக இருந்துள்ளது.

உடனே அந்த நண்பர் அவரிடம் தெரிவிக்க, அந்த புகைப்படங்களை மீண்டும் பார்த்த போது அதில் நிர்வாணமாக இருந்தது வீட்டின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது.வீட்டு வேலைகளை முடித்த பின்பு நிர்வாணமாக இருந்த அவர் அப்படியே வீட்டில் இருக்கும் அறைகள் தொடர்பான புகைப்படங்களை எடுத்துள்ளார்.



அப்படி எடுத்த போது அருகில் இருந்த கண்ணாடியை மறந்துள்ளார். இதனால், அவர் அப்படியே புகைப்படத்தில் விழுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இப்படி பல மாதங்களாக இணையத்தில் இருந்ததை யாரும் சரிவர கவனிக்காமல் இருந்திருப்பது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த தகவல் தெரிந்தவுடன், அந்த இணையத்தில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post