கடந்த 2016 ஆம் ஆண்டு, மே மாதம், அமெரிக்காவின், பிரௌன்ஸ்வில்லி அருகே உயிர் இழந்த நிலையில் ஒரு இரட்டைத்தலை மான் கிடைத்தது. இந்த மானை பரிசோதித்த மருத்துவர்கள், அது இறந்து ஆறு மணி நேரம் ஆகிறது, தாயின் வயிற்றிலேயே இறந்திருக்க கூடும், என்று கூறினார்.

இந்த இரட்டைதலை மான் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில், ''மான்களில் இரு தலைகளுடன் கருத்தரிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. பிறந்த பிறகு அந்தக் குட்டி சில மணி நேரங்களில் இறந்துவிட்டது. எனினும், இந்த இரட்டைத் தலையுடன் கூடிய மான் குட்டி உயிருடன் முழுமையாகப் பிறந்திருப்பது. உலகில் இதுவே முதல் முறை’ என்றும் தெரிவித்துள்ளனர்.