தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்த குழந்தை! சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வேலம்மாள் (25). இவர், பிரசவத்திற்காக சுரண்டை கமலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்ந்தார்.

நேற்று காலை வேலம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டது என கூறி அதை உடனடியாக அடக்கம் செய்யுங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதபடி குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.

அவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மயானத்தில் குழந்தைக்கு காது குத்தப்பட்டது.

அப்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக அங்கு விரைந்த ஆம்புலன்ஸில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தை காப்பாற்றப்பட்டது.

முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
Previous Post Next Post