இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த அடல்ட் படத்தில் நடித்திருப்பதற்காக பலரும் இவரை கடுமையாக விமர்சித்துவந்தாலும், யாஷிகா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேட்டிகள் கொடுத்துவருகிறார்.

இவரின் பேட்டிகள் பல சர்ச்சையை கிளப்புவதாகவே உள்ளது. சமீபத்தில் கூட கற்பு குறித்து பேசி மக்களிடம் இவர் வாங்கி கட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவரது இன்னொரு ஓபன் டாக்கின் போது தான் முதன்முதலாக பார்த்த அடல்ட் படம் பற்றி கூறியிருக்கிறார் யாஷிகா.

யாஷிகாவும் அவரது கஸினும் சேர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே, இணையத்தில் புளூ ஃபிலிம் பற்றி தேடியபோது அம்மாவிடம் மாட்டிக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என தெரிந்து கொள்ள தான் இணையத்தில் தேடினோம்.

ஆனால் கடைசியில் அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். என அதில் தெரிவித்திருக்கிறார் யாஷிகா. மொத்தத்தில் தனது ஓபன் டாக் மூலம் மீடியா வெளிச்சத்தை தன் மீது தக்கவைத்து கொள்வது எப்படி என தெரிந்து வைத்திருக்கிறார் யாஷிகா.