பிரபல பெண் செய்திவாசிப்பாளர் விபத்தில் மரணம்! ரசிகர்கள் வேதனை.

விபத்துகளில் உயிர்விடுவோர்களின் எணிக்கை அதிகரித்துவரும் நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பிரபல மலையாள தொலைகாட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்த சூர்யா வாசன் தனது உறவினர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வர ஸ்கூட்டரில் பயணம் செய்திருக்கிறார்.அப்போது திடீரென்று ஒரு வேன் இவரது வண்டியில் மோத பெரிய விபத்து ஏற்பட்டு, இந்த சம்பத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா வாசன், கண் இம்மைக்கும் நேரத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்பு சம்பவ இடத்திலேயே சூர்யா உயிரிழந்துள்ளார்.29 வயதான இவர் நீண்ட காலமாக பிரபல மலையாள தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இவரின் மறைவிற்கு, ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய அப்பா 5 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா வாசனின் இறுதி ஊர்வலம் நேற்று 3 மணியளவில் நடந்துமுடிந்தது.
Previous Post Next Post