ஆசைக்கு இணங்க மறுத்தார்: தம்பி மனைவியை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

தமிழ்நாட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சொத்து பிரச்சனை காரணம் என கூறப்பட்ட நிலையில் மைத்துனர் ஆசைக்கு இணங்காததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்த ஜோசப் ராஜசேகர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் மனைவி எஸ்தர் (25) மேலாளவந்தசேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.



இந்நிலையில் கடந்த 6-ந் திகதியிலிருந்து திடீரென்று வீட்டில் இருந்த எஸ்தரை காணவில்லை.

இது குறித்து எஸ்தர் குடும்பத்தார் ராஜசேகருக்கு தகவல் கொடுத்த நிலையில் மேலாளவந்தசேரி கிராமத்துக்கு அவர் வந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ராஜசேகரின் அண்ணன் நெல்சன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில் எஸ்தரை சொத்து பிரச்சனை காரணமாக கொன்றதாக முதலில் கூறினார்.

பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் எஸ்தர் தனது ஆசைக்கு இணங்காததால் கொலை செய்தததாக கூறியுள்ளார்.

நெல்சன் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தந்தை இறந்த பின்பு என் தம்பி என்னிடம், இனிமேல் நீதான் எனது மனைவி மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் கூறி விட்டு வெளிநாடு சென்றான்.

ஆனால் எஸ்தர் அழகால் எனக்கு அவரை அடைய ஆசை ஏற்பட்டது.

இதை அவரிடம் நான் தெரிவித்த நிலையில் அதற்கு உடன்படவில்லை.

கடந்த 6-ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த எஸ்தரிடம் மீண்டும் அசைக்கு இணங்க வலியுறுத்தினேன்.

அதற்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்து என்னை கண்டபடி திட்டினார்.

மேலும் இதுபோல் தொடர்ந்து நடந்தால் எனது கணவரிடம் தெரிவிப்பேன் என்று கூறியதால் எனக்கு ஆத்திரம் வந்தது.
இதையடுத்து என் தம்பி ராஜசேகரிடம் எஸ்தர் இது குறித்து கூறிவிடுவாரோ என பயந்து அவரை என் நண்பர் சகாயராஜுடன் இணைந்து கொல்ல முடிவெடுத்தேன்.

இதையடுத்து சகாரயாஜ் எஸ்தர் வீட்டுக்கு வந்த நிலையில் கத்தியால் எஸ்தரின் கழுத்தை அறுத்து கொன்றார்.

அதனைத்தொடர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் உடலை இரண்டு துண்டாக்கினோம். 2 கால்களின் முட்டிகளை மட்டும் தனியாக வெட்டினோம். கைகள் இரண்டையும் தனியாக வெட்டினோம்.
2 சாக்கு மூட்டைகளில் எஸ்தரின் உடலை கட்டி மொபட்டில் வைத்து அருகில் உள்ள கோரையாற்று புதரில் போட்டு விட்டு வீடு திரும்பினோம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து நெல்சன் மற்றும் சகாயராஜை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post