இந்த கோடை காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரே பயம் இது தான்! கவலை வேண்டாம் இதை பயன்படுத்தி கோடை வெயிலை சமாளிக்கலாம்.


வதங்கிப் போன கை மற்றும் பாதங்களைப் பற்றிய கவலையா? உலர்ந்த காற்று மற்றும் உயர் வெப்பநிலையால் சருமம் வறண்டு இருப்பதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம்.


இந்த வறட்சியால் கைகளில் நோய்த் தொற்று ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயத்தைப் போக்குங்கள். இந்தக் கோடை வெயிலில் இருந்து உங்கள் கைகளைப் பாதுகாப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வீட்டை விட்டு எப்போது வெளியில் சென்றாலும் மறக்காமல் சூரிய ஒளியில் இருந்து உங்களைக் காக்கும் சன் ஸ்கிரீன் கிரீமை மறக்காமல் தடவிக் கொள்ளுங்கள். அது வறட்சி மற்றும் நிறம் மங்குதல் போன்றவற்றிலிருந்து நிச்சயமாக உங்களைப் பாதுகாக்கும். SPF 30+ அளவுடையதே சிறந்தது.


பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க ஆண்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்திக் கைகளின் அக்குள் பகுதிகளைச் சுத்தம் செய்யுங்கள்.
கை மற்றும் பாதங்களில் உள்ள கருந்திட்டுக்களைப் போக்க புதினா மற்றும் தேங்காய்ப்பால் உள்ளடங்கிய கலவையை மாய்ச்சுரைசராகப் பயன்படுத்தலாம்.இது வறட்சியைப் போக்குவதோடு உங்கள் சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

உடலின் பிற பாகங்களை விடக் கருப்பாக இருக்கும் உங்கள் கையின் மூட்டுப்பகுதியைப் பராமரிக்க மறந்துவிடாதீர்கள்.


கையின் மூட்டுப்பகுதியைக் குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்தால்தான் அப்பகுதியில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்க முடியும். மூட்டுப்பகுதியை பளிச்செனவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள எலுமிச்சை சிறந்த பலனைத் தரும்.
Previous Post Next Post