
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மரியகிரி தெங்கு விளையை சேர்ந்தவர் சர்ஜின். இவர் ஓட்டுநர் என்பதால் கேரளாவுக்குச் சென்று அங்கு பணியாற்றி வந்தார். அங்கே பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாகி, கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்து வசித்து வந்தனர். தற்போது இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக கணவர் சர்ஜின் வேறு பெண்களுடனும் பேசிப் பழகுவதாக பிபிதாவுக்கு சந்தேகம் வரவே தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாய் போனது.
சம்பவம் நடந்த நேற்று நள்ளிரவு சர்ஜின் தூங்கிக்கொண்டிருக்கும் பபிதா இன்பு கம்பியால் அவரை தாக்க ஆரம்பித்துள்ளார். மேலும் கத்தியை கொண்டு அவரின் கழுத்தை அறுக்க முயற்சிக்கும் போது, சர்ஜீன் அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து என்ன என்று பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சர்ஜின் வலியால் கத்தி கொண்டிருந்தார். அவரின் அருகில் கையில் இரும்பு கம்பியுடன் பிபிதா நின்று கொண்டிருந்தார். பொதுமக்களை பார்த்ததும் பிபிதா வீட்டில் இருந்து இரும்பு கம்பியுடன் வீட்டின் மாடியில் ஏறி கொண்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவர் தப்பாமல் இருக்க அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பை நின்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்ஜினை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், பபிதாவை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.