இளைஞரை கொன்று புதைத்த கல்லூரி மாணவி: அதிரவைக்கும் சம்பவம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் தொழில் செய்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் வலைதளத்தால் அறிமுகமான இளைஞரை கொன்று புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் குடியிருந்து வரும் ப்ரியா சேத் என்ற 27 வயது இளம்பெண்ணே, ஏமாற்றுதல், பணம் பறித்தல், பாலியல் தொழில் மற்றும் கொலை தொடர்பில் கைதானவர்.

கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்து கொண்ட ப்ரியா சேத் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பாலியல் தொழிலில் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு துஷ்யந்த் சர்மா(27) என்ற ஜெய்ப்பூர் தொழிலதிபரின் நட்பு டிண்டர் டேட்டிங் செயலி மூலம் கிடைத்துள்ளது.இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் கடந்த 2-ஆம் திகதி இருவரும் சந்திக்க முடிவு செய்து ப்ரியா தங்கியிருக்கும் பாலாஜி நகர் குடியிருப்பில் துஷ்யந்த் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து தந்து துஷ்யந்தை ப்ரியா மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட மூவரும் இணைந்து கயிறால் பிணைத்து ஒரு அறையில் பூட்டியுள்ளனர்.

பின்னர் துஷ்யந்தின் தந்தையை மொபைல் தொடர்பு கொண்டு 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனிடையே அந்த முயற்சி தோல்வியில் முடியவே, துஷ்யந்திடம் இருந்து பணம் எதிர்பார்க்க முடியாது என ப்ரியாவுக்கு தெரிய வந்தது.

ஆனால் அவரை வெளியே அனுப்பினால் அது தமக்கு ஆபத்தாக முடியும் என்பதால், தமது காதலர் Dikshant Kamra(20) மற்றும் அவரது நண்பர் Lakshya Walia(21) ஆகியோருடன் இணைந்து கொலை செய்து உடலை பெட்டியில் அடைத்து ஆமர் என்ற பகுதியில் புதைத்துள்ளனர்.

இதனிடையே பாலியல் வழக்கு தொடர்பாக சிக்கிய ப்ரியாவிடம் நடைபெற்ற விசாரணையில் கொலை மற்றும் பணம் பறித்தல், போதை மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

தற்போது துஷ்யந்த் சர்மா கொலை வழக்கு தொடர்பில் ப்ரியா மற்றும் அவரது காதலன் மற்றும் அவரது நண்பர் என மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post