நீ யாருக்கும் கிடைக்ககூடாது! நடுரோட்டில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிய காதலன்

தமிழகத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள் உள்ளார்.

இவரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரபாகரன்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனக் கசப்பு ஏற்பட்டதால், அசோனா இவரிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள பல்முனை வர்த்தகம் நிறுவனம் ஒன்றில் அசோனா வேலை செய்து வந்ததால், இதை அறிந்த பிரபாகரன் அவரிடம் தினமும் பேச முயற்சி செய்துள்ளார்.


ஆனால் அந்த பெண்ணோ இவரிடம் பேசாமல் தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அசோனாவை கடந்த சில தினங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அசோனா தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த பிரபாகரன் அசோனாவின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சி செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அசோனா கத்தி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வருவதற்குள் அவர் அங்கிருந்து பைக்கிள் தப்பியுள்ளான்.அதன் பின் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இதில் மாணவியின் கழுத்தில் லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளதாவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து விருத்தாசலம் எருமனூர் பகுதியில் பொலிசார் ரோந்து பணியில் இருந்த போது இரு சக்கர வானத்தில் வந்த இளைஞரை பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் பதில் கூறியதால், சந்தேகமடைந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை அறுத்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும், அசோனாவும் காதலித்து வந்தோம்.

கடந்த சில மாதங்களாகவே அசோனா என்னிடம் சரிவர பேசாமல் வெறுப்பை காட்டினார். இதனால் அவரை பழிவாங்கும் முயற்சியிலும், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.
Previous Post Next Post